*தமிழகத்தில் கடந்த மார்ச் 2019-இல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அதுபோல் 2018 மார்ச், ஜூன் பருவத் தேர்வுகளில் பிளஸ் 1 தேர்வுக்கு வருகை புரியாத, தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019 பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்*

*இந்த சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும்*

*தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு வரும் மே 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மே 8-ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 5.45 மணி வரையான நாள்களில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரௌசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது*

*❇❇தேர்வர்கள் கவனத்துக்கு*

*பிளஸ் 1 பொதுத்தேர்வை பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள் தேர்ச்சி பெறாத பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுத ஜுன் 2019 நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும்*

*அதே போன்று பிளஸ் 2 பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதவும், பழைய நடைமுறையின்படி (மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதவும் ஜுன் 2019 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வினை புதிய நடைமுறையின்படி (மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு) தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத ஜுன் 2019 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும்*

*புதிய பாடத்திட்டத்தில் முதல் முறையாக மார்ச் 2019-இல் பிளஸ் 1 பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பாடங்களில் ஜுன் 2019 பிளஸ் 1 சிறப்பு பொதுத் தேர்வின்போது தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்*

*பிளஸ் 2 வகுப்பு தேர்வர்களுக்கான ஜூன் மாத சிறப்பு துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி முதல் ஜுன் 13-ஆம் தேதி வரையிலான நாள்களிலும், பிளஸ் 1 தேர்வர்களுக்கு (பழைய, புதிய பாடத் திட்டம்) சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 14-ஆம் தேதி முதல் ஜுன் 21 வரையிலான நாள்களிலும் நடைபெறும். இந்த இரு வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தேர்வு கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்*

*🔰🔰தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை*

*தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்*

*தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்*