புதுக்கோட்டை,ஜீன்.8: புதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வினை 4387 பேர் சனிக்கிழமை எழுதுகின்றனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறினார்.




ஆவுடையார்கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது:இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 14 தேர்வு மையங்களில் 4387 பேர் முதல் தாள் தேர்வினை எழுதுகின்றனர்.இதில்  அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஆவுடையார் கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சுப்ரமணியபுரம்  ஆகிய நான்கு மையங்களில்  மொத்தம் 1240 பேர் தேர்வினை எழுதுகின்றனர.இதில்மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 20 பேர் அடங்குவர்.

அதே போல் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் ஒரே தேர்வு மையமான கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 281 பேர் தேர்வினை எழுதுகின்றனர்.இதில் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 5 பேர் அடங்குவர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரிமளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,சிவபுரம் கற்பகவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ,புதுக்கோட்டை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 9 மையங்களில் மொத்தம் 2866 தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்.இதில் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் மொத்தம் 38 பேர் அடங்குவர்.மேலும் தேர்வெழுதுபவர்கள் காப்பியடித்தல் போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.செல்போன்,கால்குலேட்டர் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .மேலும் தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here