*நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. கடந்த 15ம் தேதி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24
வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம்  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.*

*🚀🚀🚀சந்திரயான்-2 சிறப்புகள்!!*

*♦♦உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கிறது இந்தியா*

*♦♦நிலவில் இந்தியாவின் 2வது ஆளில்லா விண்வெளி ஆராய்ச்சி இது*

*♦♦சந்திரயான் 2 திட்டத்தை செயல்படுத்த ரூ.978 கோடி இந்தியா செலவிட்டுள்ளது*

*♦♦நிலவில் சாஃப்ட் லேண்டிங் - தரையிறங்கும் 4வது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது*

*♦♦முழுதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்கல தொழில்நுட்பம்*

*♦♦நிலவின் கனிம வளம், நீர் இருப்பு பற்றி சந்திரயான்-2 ஆராய்கிறது...*

*சோதனை வென்றால், நிலவில் நீர் எடுத்த முதல் ஆட்கள் இந்தியர்கள் தான்!*


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here