அரசாங்கம் மடிகணினியை கொடுப்பதற்கு காரணம் இருக்கும் அல்லவா?

மூன்று மாதம் கழித்து உங்களுக்கு நீங்கள் மடிக்கணியை எவ்வாறு சுயமாக பயன்படுத்துகிறீர்கள் அதாவது வலைதளத்தில் நுழையத் தெரிகிறதா க்யூஆர் கோட் கொண்டு பாடம் நடத்த தெரிகிறதா எமிஸ் வலை தளம் சென்று  மாணவர் விவரங்கள், புள்ளிவிவரங்கள், பள்ளி பதிவேடுகள் அனைத்தையும் பதிவிடவும் அதன் மூலம் தகவல்களை தொகுக்கவும் அவற்றை மின்னஞ்சல் மூலமாக உயர் அலுவலர்கள் புள்ளி விவரங்கள் கேட்கும் பொழுது உடனடியாக பதில் தரவும் தெரிகிறதா என்று பரிசோதனை செய்வார்கள்.

எனவே வாங்கிய மடிகணினியை தூங்க விடாதீர்கள் அதனுடன் நீங்களும் பழகுங்கள் உயர்நிலை,& மேனிலைப் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் இருப்பதுபோல் தங்கள் பள்ளியின் இமெயிலில் Message வரும்.

அதற்கு நீங்கள்தான் இமெயிலில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எந்த இமெயில் Id-க்கு அனுப்ப சொல்கிறார்களோ அதை பள்ளியை விட்டு வெளியே செல்லாமல் (BEO,DEO&CEOஅலுவலகத்திற்கு)பள்ளியினுள் இருந்து கொண்டு அந்த விபரத்தை  இமெயிலில் அனுப்ப வேண்டும்.

கணினியோடு பழக தயாராகிக் கொள்ளுங்கள்

இதுவும் காலத்தின் கட்டாயம்