நல்லாசிரியர் விருது பெறத் தகுதியுடைய ஆசிரியர்களின் விவரங்களை ஆகஸ்ட்.14ஆம் தேதிக்குள் அனுப்புமாறுமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்க தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ளது.
அதில், சுயஓழுக்கம், நேரம் தவறாமை, மாணவர்கள் சேர்ப்பு மற்றும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பாடுபடுவோர், அரசியல் கட்சிகளை சாராதவர்கள், டியூசன் நடத்தாதவர்கள், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர்கள், குற்றப்பிண்ணனி இல்லாதவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதவர்கள் உள்ளிட்ட 17 வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த 17 வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பரிந்துரை செய்யும் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும் எவ்வித உள்நோக்கமும் இருக்கக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தகுதியான ஆசிரியர்கள் பெயரை பரிந்துரைக்குமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here