சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் கருவி 'விக்ரம்' உடனான தகவல்தொடர்பு துண்டிப்பு

* இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

* நிலவின் நிலப்பரப்பில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருக்கும் போது தகவல் துண்டிப்பு





இந்த மாதம் 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது.லேண்டரின் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்து வந்தனர். எனினும் லேண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை.
இதனையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் தகவலை வெளியிட்டார். அதில், 'நிலவிலிருந்து 2.1 கிலோமீட்டர் தூரத்தில் லேண்டர் இருந்தப் போது அதன் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் தரவுகளை வைத்து விஞ்ஞானிகள் தகவல் துண்டிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரோ தலைவர்
சிவன் பேச்சு
சோர்வடைந்த முகத்தோடு அதிகாலை 2.16 மணிக்கு, விஞ்ஞானிகள் குழுவினருக்கு நடுவே வருகை தந்தார், இஸ்ரோ தலைவர் சிவன். "விக்ரம் லேண்டரின் தரையிறக்கம் திட்டமிட்டபடி இருந்தது. சாதாரணமாகவே சென்றது. நிலவிலிருந்து, 2.1 கி.மீ உயரத்தில் லேண்டர் சென்றபோது, லேண்டரிலிருந்து தரை கட்டுப்பாட்டு மையத்திற்கான தகவல் தொடர்பை இழந்தது. இதுதொடர்பான டேட்டா ஆய்வு செய்யப்படுகிறது," என்று கனத்த குரலில் சொன்னார் இஸ்ரோ தலைவர், சிவன்.

மோடி பரபரப்பு
வெளியேறிய மோடி

அப்போது, பொறுமையிழந்தவராக காணப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. எதையோ, யோசித்தவராய், தான் அமர்ந்தருந்த மாடத்திலிருந்து மோடி எழுந்து நின்றார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட விஞ்ஞானிகள் குழு, பிரதமர் மோடியை, நோக்கி, நடந்து செல்வதைக் காண முடிந்தது. பிரதமர் அவர்களிடம் ஏதோ கூறி, தலையசைத்தார். இதன்பிறகு அந்த இடத்தை விட்டு வெளியேறி கீழே நடக்க ஆரம்பித்தார். இதையடுத்து, சக விஞ்ஞானிகள், தங்கள் குழு தலைவர் சிவனிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.



நம்பிக்கை உரை
நம்பிக்கையளித்த மோடி

பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து வெளியேறும்முன்பாக, இஸ்ரோ தலைவர் சிவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். சூழ்ந்து நின்ற விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். "வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. அப்படித்தான் இதுவும். நீங்கள் செய்துள்ளது சிறிய சாதனை அல்ல. தேசம் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது. சிறந்த நம்பிக்கையளித்துள்ளீர்கள். நான் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் இந்த நாடு, அறிவியல் மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளீர்கள். நான் உங்களுடன் எல்லா வழிகளிலும் துணையாக இருக்கிறேன், தைரியமாக முன்னேறுங்கள்" என்று கம்பீரமாக மோடி சொன்னபோது, அங்கே குழுமியிருந்த விஞ்ஞானிகள் முகங்களில் கவலை மறந்து ஒரு நம்பிக்கை கீற்று மின்னி மறைந்ததை பார்க்க முடிந்தது.



அரவணைப்பு
காங்கிரஸ் ஆதரவு

இதன்பிறகு, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ட்வீட்டில், "இந்த பதட்டமான காலகட்டத்தில், மொத்த நாடும் இஸ்ரோ குழுவினருக்கு துணை நிற்கிறது. உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நம் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது. ஜெய் ஹிந்த்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், சந்திரயான் 2 நிலவு மிஷனின் நம்பமுடியாத சிறந்த பணிக்கு இஸ்ரோ குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்கள் பணி வீணாகாது. இது இன்னும் பல லட்சிய இந்திய விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here