ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி 14-ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17-ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று.

அதேபோல் வரும் 2020-ம் ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை தினத்தன்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதால் பொங்கல் தொடர் விடுமுறை கொண்டாட முடியுமா? வெளியூர் பயணம் செல்ல முன்னரே தயாராக முடியுமா?  என்ற குழப்பத்தில் பெற்றோர்களும்,  ஆசிரியர்களும் உள்ளனர்

Join Telegram& Whats App Group Link -Click Here