🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻




*இன்றைய திருக்குறள்*

வான்சிறப்பு
குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

*மு.வ உரை:*

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

*சாலமன் பாப்பையா உரை:*

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

*கலைஞர் உரை:*

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நமக்கு கிடைப்பது வெற்றியோ தோல்வியோ, அதைப்பற்றி கவலைபடாதீர்கள். தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபடுங்கள்.
- சுவாமி விவேகானந்தர்

🌿🍀☘🌿🍀☘🌿🍀

*உடல் நலம்*

*தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்*

                   ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?

*சீனா*

2.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?

*லூயி பாஸ்டியர்*

3.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?

*நீலகிரி*

4.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?

*ரிக்டர்*

5. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?

*பச்சேந்திரி பாய்*

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Used Words*

 Sweet Potato வள்ளிக்கிழங்கு

 Tobacco புகையிலை

 Tomato தக்காளி

 Touch-me-not தொட்டாற்சிணுங்கி

 Watermelon தர்ப்பூசணி

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)
 ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும். இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.

அவைகளாவன:

F = For

A = And

N = Nor

B = But

O = Or

Y = Yet

S = So

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

I like bread and butter.

I like tea, but I don't like coffee.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) அழைப்பர்.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*முக்காற்புள்ளி (:)*

உள் தலைப்பு அமைக்கும்போது, ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும்     முக்காற்புள்ளி இடவேண்டும்.

*முற்றுப்புள்ளி*

வாக்கிய முடிவிலும் முகவரிஇறுதியிலும் சொற்சுருக்கத்திலும் முற்றுப்புள்ளி     இடவேண்டும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *புதிர் கதை*

ஆசிரியர் மூன்று மாணவர்களின் கற்பனை திறன்
 ஆசிரியர் மூன்று மாணவர்களிடம் கற்பனை வளத்தையும் மனதாபிமானத்தையும் அறியும் பொருட்டு ஒரு சோதனை கேள்விகேட்டு பரிசும் கொடுக்க தீர்மானித்தார். நீங்கள் காட்டுவழியாக மூவரும் செல்லுகிறீர்கள்இ என்று தொடக்கி விட்டார்இ சற்று நேரம் மூவரையும் யோசிக்க விட்ட பின்பு .

*மாணவன் ராஜேஷ்* :
நான் காட்டுவழியாக சென்றபோது ஒரு மான் குட்டி தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்த போது ஆற்றில் விழுந்து உயிருக்கு தத்தளித்தது அதை காப்பாற்றி விட்டேன் என்றான்.

*மாணவன் ராஜா* : நான் காட்டுவழியாக சென்றபோது ஒரு கொடூரப்புலி ஒன்றின் காலில் கட்டை ஒன்று ஏறியிருந்து வேதனையில் துடித்தது. கடும் முயற்சி எடுத்து கட்டையை எடுத்து விட்டேன் என்றான்.

*மாணவன் ராமன்*:
காட்டு வழியாக வந்த முதியோர் ஒருவர் அவரது வைரமோதிரத்தை தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருந்தார் பல மணிநேரமாகஇ நான் அதை கண்டுபிடித்துவிட்டேன் நினைத்து இருந்தால் நான் எடுத்துக்கொண்டு ஓடியிருக்கலாம்இ நான் கொடுத்துவிட்டேன் என்றான்.

ஆசிரியர் ராஜாவையே தேர்வு செய்தார். ஏன்?

*விடை* :
  உயிரை காப்பாற்றுவதோ நேர்மையாக நடப்பதோ நல்லவர்கள் செய்யும் பணி. ஆனால் தன் உயிருக்கே ஆபத்து என்று அறிந்தும் உதவி செய்வதே பெரும் தியாகம் என்றார் !

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக 'ஷு'வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

🔮 டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

🔮திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் உள்ள 30 ஏரிகளில் மட்டும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள 10.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

🔮இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி, உளவுத்துறை தகவல்.

🔮குறைந்த கட்டணத்தில் மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் சிறந்த வாய்ப்பு.

🔮அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் - டிரம்ப் அறிவிப்பு.

🔮இந்திய கிரிக்கெட்டின் வடிவத்தையே மாற்றியவர் தோனி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புகழாரம் சூட்டியுள்ளது.

🍀☘🌿🍀☘🌿🍀☘

*தொகுப்பு*
T.தென்னரசு,
இ.ஆசிரியர், தமிழ்நாடு டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here