பொது தேர்வு பணிகளை, ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது' என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது சுற்றறிக்கை:


தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பாக, தேசியதிறன் அறிதல் தேர்வு, தேசிய தகுதி மற்றும் வருவாய் வழி தேர்வு, ஊரக திறன்அறிதல் தேர்வு, எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகியன நடத்தப்படுகின்றன. அதேபோல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுக்கான பணிகளில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வு பணிகளுக்கு அழைக்கப்படும்போது, ஆசிரியர்கள் பலர் பணிக்கு வர மறுப்பதாக தெரிகிறது.ஏதாவது காரணம் கூறி, விடுமுறை எடுப்பது, மருத்துவ விடுப்புஎடுப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும். தேர்வு துறை பணிகளை, ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது.மருத்துவ காரணங்களுக்காக, உண்மையில் வர முடியாதவர்களின் நிலையை விசாரித்து, அதற்குரிய தீர்வை, பள்ளி கல்வி துறை அறிவிக்கும். மாறாக, தவறான காரணங்கள் கூறி, யாரும் தேர்வு பணிகளை புறக்கணிக்க கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.