🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻



*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 191*

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
 எல்லாரும் எள்ளப் படும்.

மு.வ உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

கருணாநிதி  உரை:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*
எளிமை, நேர்மை, உண்மை ஆகியவை இல்லாமல் எந்தக் காலத்திலும் நமக்கு உயர்வு இல்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பொது அறிவு*

1.மிகப் பெரிய கடல் பறவை எது?

*அல்பட்ராஸ்*

2. யானையின் இதயத் துடிப்பு  நிமிடத்திற்கு எத்தனை முறை?

*24*

♻♻♻♻♻♻♻♻
*பழமொழி மற்றும் விளக்கம்*

*இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்* .

நாம் அறிந்த விளக்கம் :

ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல என்று சொல்லப்பட்ட பழமொழியாக நாம் கருதுகிறோம்.

விளக்கம் :

மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக சிக்கனமாக முடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் மூலம் அறியும் உண்மை விளக்கம் ஆகும்.

♻♻♻♻♻♻♻♻

*Important  Words*

 Horse குதிரை
 Hound வேட்டை
 நாய்

 Hyena கழுதைப் புலி

 Jackal குள்ளநரி

 Jackass ஆண் கழுதை

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; ஆனால் மழை பெய்யாது. அது என்ன?

*பட்டாசு*

2. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இருக்காது? அவர்கள்
யார்?

*எறும்புக் கூட்டம்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*நல்ல நண்பன் வேண்டும்*


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮செப். 20க்குள் விக்ரம் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.

🔮பயங்கரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது -பிரதமர் மோடி.

🔮படிப்புக்கு பிந்தைய பயிற்சி, வேலைக்கான இரண்டு வருட விசாவை இங்கிலாந்து மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்து உள்ளது.

🔮அக்டோபா 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் : மதுராவில் பிரதமர் மோடி உரை.

🔮வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔮உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி.

🔮Modi says India fully capable of dealing with the challenge of terrorism.

🔮U.K. opens up two-year post-study work permit visa again.

🔮Meenakshi temple ranked 2nd among Swachh Iconic Places.

🔮No more single-use plastics in Tamil Nadu schools.

🔮Felt like playing at home: Gurpreet after goalless draw against Qatar.

🔮Afghanistan equal Australia record with Test thrashing of Bangladesh.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪


Join Telegram Group Link -Click Here