திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் VP-TN0063 அக்னி சிறகுகள் அறிவியல் மன்றத்தின் சார்பாக மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் கற்றுத்தரப்படுகிறது

அமெரிக்காவில் டெக்ஸாஸ்  மாஹாணத்தில்  கல்வி பயிலும் செல்வி.க.பிரியங்கா கணேசன்  என்பவர் இந்த வகுப்பினை எவ்வித கட்டணமின்றி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.

இவர் அமெரிக்காவில் டெக்ஸாஸில் 2018 மற்றும் 2019 ரோபாடிக்ஸ் போட்டியின் வெற்றியாளர்

ரோபாடிக்ஸ் பயிற்சியாளரான இவர் First Robatics எனும் அமெரிக்காவின் அமைப்பில் Steal Talons எனும் பெயரில் இவரது குழு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது குழு ரோபாட்டிக்ஸ் பிரிவில் உலகளவில் போட்டிகளில் வெற்றிபெற்ற முதன்மை அமைப்பாகும்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்  வா.சுரேஷ் என்பவரது பல்வேறு கல்விசார் செயல்பாடுகளை அறிந்த இவர் இவர் பணியாற்றும் கிராமப்புர மாணவர்களுக்கு முதலில் ரோபாட்டிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அணுகியுள்ளார்.

அதன்படி விடுமுறையில் தனது சொந்த ஊரான தமிழகம் வருகை தந்த போது ஆசிரியர் கல்வித்துறையின் அனுமதிபெற்று பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்தார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இச்சிறப்பு பயிற்சி வகுப்பில் 6,7,8வகுப்பு மாணவர்கள் மூன்று பிரிவுகளாக கற்றனர்
முதலில் Lego we do எனும் kit ஐக் கொண்டு Motar, Sensor, Hub இவற்றை பயன்படுத்தும் விதம் குறித்து செய்முறை விளக்கம் தரபட்டது. மாணவர்கள் மடிக்கணினியில் பிரத்யோக செயலியின் உதவிக்கொண்டு தாமாகவே சிறு செயல்பாடுகள் செய்து அதன் அறிக்கையினை உடன் தெரிந்து கொண்டனர்.

பிறகு Lego EV3 எனும் அதிநவீன kit குறித்து செயல்விளக்கம் தரப்பட்டது

அதில் மாணவர்களது ஆர்வம், கற்றல் திறன் கண்டு வியந்த பயிற்சியாளர் பிரியங்கா ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க தொடர் செயல்பாடாக இணையத்தின் வாயிலாக வழங்க திட்டமிட்டுள்ளார். மேலும் இவர்களது தொடர் கற்றலுக்கு தேவையான kit னை அமெரிக்க நிறுவனத்தினரிடம் ஸ்பான்ஸராக கேட்டுள்ளதாக கூறினார்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் வா.சுரேஷ் கூறுகையில்

ரோபாட்டிக்ஸ் என்றதும் பலரும் நினைப்பது இது ஒரு தொழிற்நுட்ப ரீதியான படிப்பு என்றே எண்ணுகின்றனர். அதுமட்டுமல்ல மனிதர்களின் உடல் உழைப்பை தவிர்க்கச் செய்து அவர்கள் செய்ய முடியாத வேலைகளையும் செய்வதற்கான கருவிகளை உருவாக்கவும் இக்கல்வி அவசியமானது. என்பதை இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புர மாணவர்களுக்கு தான்கற்ற கல்வியை கற்றுத்தரவேண்டும் என்கிற பிரியங்காவின் முயற்சி மட்டுமல்லாமல் அவருக்கு ஊக்கம் தரும் அவரது பெற்றோரையும்  சகோதரியையும் பாராட்டி மகிழ்வதோடு இது எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று கூறினார்.

மேலும் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் RV.முத்தண்ணா பாராட்டினார்
ரோபாட்டிக்ஸ் என்பது பணக்காரர்கள் அல்லது நகர்புற மாணவர்கள் மட்டுமே படிக்கும் அல்ல அனைவராலும் கற்க இயலும் என்பதை விளக்கியுள்ளது இந்நிகழ்வு இவர்களது இந்நிகழ்வு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்றார்

அனைத்து பள்ளிசார் நிகழ்வுகளுக்கும் ஆதரவு அளிக்கும் தலைமையாசிரியர் நா.வாசுகி அவர்கள் மூன்றுநாள் நிகழ்விற்கு தலைமையேற்றார்

இதுபற்றி பிரியங்காவின் தந்தை கூறுகையில் எனது சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிதான் வேலை காரணமாக கடந்த 10வருடமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறோம். எனது மகள் இருவரும் இங்கு கல்வி பயில்கின்றனர் இவர்கள் ரோபாட்டிக்ஸ் துறையில் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றவர்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விடுமுறைக்கு தமிழகம் செல்வதைக் கூறியதும் பிரியங்கா தான் கற்ற ரோபாடிக்ஸ் குறித்து கிராமப்புர மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அவரது முயற்சியை பாராட்டி அவரோடு பயணிக்கிறோம் என்றார்.

வா.சுரேஷ்
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கள்ளிக்குடி
9865593067
devttp@gmail.com



Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here