ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல், அரசு உதவி பெறும் ஆசிரியர்களை, பணியில் நீடிக்க செய்வதா அல்லது நீக்குவதா என்ற குழப்பம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வி துறையில், ஆசிரியர்களின் நியமனத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மேற்கொள்கிறது. மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 2010 முதல் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள், 2010க்கு பின் நியமனம் செய்யப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், பதவியில் நீடிக்க முடியாது என, தமிழக பள்ளி கல்வி துறை, ஏற்கனவே எச்சரித்துள்ளது.இந்த பிரச்னையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஜூனில் நடந்த, தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற, அந்த ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், 1,500 ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள், தேர்ச்சி பெறவில்லை. எனவே, தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை, பணியில் இருந்து நீக்குவதா அல்லது நீடிக்க செய்வதா என, பள்ளி கல்வித் துறைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, விரைவில் முடிவு அறிவிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join Telegram Group Link -Click Here