தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) - 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) - 2688, பில் கலெக்டர், கிரேடு - I -34, பீல்டு சர்வேயர் - 509,
டிராப்ட்ஸ்மேன்- 74, தட்டச்சர் - 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியிட்டது.


இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிட்டது.

விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.

தேர்வு நடந்த நாளில் இருந்து 72 நாட்களில் தரவரிசைப்படுத்தி தேர்வு முடிவுகளை குறைவான நாட்களில் வெளியிட்டிருந்தது தேர்வாணைய வரலாற்றில் இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 105 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.