கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுக்கும் வகையில், உலக அளவில் கணினிகள் மற்றும் லேப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆபரேடிங் சிஸ்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் விண்டோஸ் 10 பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது.
எனவே, இந்த தேதிக்குள், வின்டோஸ் 7ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது டேப்டாப்பில் வின்டோஸ் 10ஐப் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது


Join Telegram& Whats App Group Link -Click Here