🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻



*குறள் -103*

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
 நன்மை கடலின் பெரிது.

*பொருள்*

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*
ஒரு அன்பான இதயம் ஆயிரம் அழகான முகத்திற்கு சமம். ஆகையால் எப்போதும் அழகான முகத்தை விட அன்பான இதயத்தை நேசி.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

*நாம் அறிந்த விளக்கம்* :

பேச்சு பெருசா இருக்கும் செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

*விளக்கம்* :

ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. ஒயிட் மேன் கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

 டென்னிஸ்

2. கிரிக்கெட் விளையாட்டில் L.B.W. என்பதன் விரிவாக்கம் என்ன?

Leg before wicket

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Use Of Few and A Few*

Few has negative and A few has positive meaning.

Example :

 I have few friends.

Practically it means no friends.

 I have a few friends.

Practically it means a small number of friends.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*எண்ணம் போல் வாழ்வு*

    ஒரு ஊரில் குமாரசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக்கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டார்.

  கடவுளை நினைத்து தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்த முனிவர் கூறினார். குமாரசாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு கடவுள் அவர் எதிரில் தோன்றினார். பக்தனே உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார். மன்னார்சாமி என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள். அதான் கேட்டேனே வரம்... அதை கொடு... என்றார் மன்னார்சாமி.

  இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? கடவுள் யோசித்தார். பக்தா இப்போது நீ என்ன நினைக்கிறாயோ அதையே வரமாகக் கொடுக்கின்றேன் பெற்றுக்கொள். அய்...யய்ய....யோ... நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே! அதான்... என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கூட! மனதில் நல்லதை நினைப்போம், நல்வழி செல்வோம்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடி, வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை -வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

🔮புதுடெல்லி-லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்தியா ரத்து செய்தது.


🔮 கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு; 2.87 லட்சம் பேர் பாதிப்பு.

🔮டெல்லி-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை: பியூஷ் கோயல்.

🔮ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’.

🔮VISAKHAPATNAMCoast Guard ship 'Coastal Jaguar' catches fire near Visakhapatnam Port, one missing.

🔮Mukesh Ambani announces Reliance's launch of Internet of Things, Jio Fiber.

🔮Now, India cancels Delhi-Lahore bus service from its side

🔮Virat Kohli became India’s second-highest run-scorer in ODIs 1,000 runs a time.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿