புதுக்கோட்டை,செப்.4:மாநில நல்லாசிரியர்  விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும்  புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலர்( பொறுப்பு)  செ.சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ( பொறுப்பு)  செ.சாந்தி  புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை,சந்தைப் பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.அமுதா,அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கி.சிவகுமார்,திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.மா.அரங்கசாமி,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சிறப்புஆசிரியர் ஆ.வேதமுத்து,
கோட்டை-1 காமராஜ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.விஜயேந்திரன்,
ஊனையூர் பிச்சையப்பா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தா.சீனிவாசன்,குருவிக்கொண்டான்பட்டி ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.மீனாட்சி,சவேரியாபுரம் புனித சவேரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரோசாலி,ஆலங்குடி  புனித அற்புதமாதா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.அருளாந்து,இலுப்பூர் ஆர்.சி.துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஞா.ஜாக்குலின் யோலா,இராஜகோபாலபுரம் வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.தவமணி ஆகிய 11பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சென்னையில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை புதுக்கோட்டை  மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராகவன் வழங்கி வாழ்த்துக் கூறி அனுப்பினார்.அப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை) ஜீவானந்தம்,முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.





Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here