தமிழக பாட திட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாடமும், முப்பருவ தேர்வும் அமலில் உள்ளன. அதேநேரத்தில், 10 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வும்; மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும், இந்த மாதம் நடத்தப்படுகின்றன.


இந்த தேர்வுகள், அரசு பள்ளிகளில், வரும், 12ம் தேதி துவங்குகின்றன; தனியார் பள்ளிகளில், இன்று முதல் துவங்க உள்ளன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையான, சி.சி.இ., திட்டத்தில், பாட திட்டம் சாராத துணை படிப்புகள் கற்று தரப்படுகின்றன. அதாவது, கம்ப்யூட்டர், கலை, உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு திறன் வளர்ப்பு படிப்புகள் நடத்தப் படுகின்றன. இவற்றுக்கான தேர்வுகள், இன்று துவங்க உள்ளன.

முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், 12ம் தேதிக்கு பின் நடத்தப்பட உள்ளன.அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வுகள், வரும், 23ம் தேதியுடன் முடிகின்றன. அதன்பின், தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்


Join Telegram Group Link -Click Here