வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் வசதி புதிதாக வரவுள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் சோதனை
செய்யப்படவுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் இருப்பவர்களின் ஸ்டேட்டஸ் மியூட் செய்யும் போது, அவை சற்றே மறைக்கப்பட்ட நிலையில், கீழ்புறமாக தெரியும். புதிய 2.19.260 பீட்டா பதிப்பில் மியூட் செய்யப்பட்டவற்றை முழுமையாக மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய அம்சம் ஹைடு மியூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா 2.19.260 பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சத்தை பயன்படுத்த முடியும். ஒருவேளை செயலியை அப்டேட் செய்த பின்பும், இந்த அம்சம் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை ரீ-இன்ஸ்டால் செய்து பார்க்கவும். இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் பேமன்ட் வசதி வழங்குவதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது

Join Telegram Group Link -Click Here