காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
27-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண் - 281

அதிகாரம் : கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
 கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

மு.வ உரை:

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

கருணாநிதி  உரை:

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி ஒன்றே.
 - பாரதியார்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
A bad work man blames his tools.
ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Daily English
1. My name is Babu
2. This is a Mango.
3. That is a Lorry
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Astronomer - வானியல் அறிஞர்
2. Armour - போர்க்கவசம்
3. Aroma - நறுமணம்
4. Arch - வளைவு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. நண்டுக்கு எத்தனை கால்கள் ?

  10 கால்கள்

2. மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் எது ?

 சுறா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடை பிடித்து வருகிறாராம் வன்னியப்பு ?

 நண்டு

2. மரத்திற்கு மேலே பழம். பழத்திற்கு மேலே மரம். அது என்ன ?

 அன்னாசி

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

வெந்தயக்கீரை

🍂 வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது.

🍂 இது மூன்று மாதங்களில் பூத்துக், காய்த்துப் பலன் தந்துவிடும்.

🍂 கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூ பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும்.

🍂சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக் கீரை, லேசான கசப்புத் சுவை கொண்டது.

🍂வெந்தயக்கீரை ஒருமுறை மட்டுமே அறூவடை செய்யக்கூடியது

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உயிரைக் காத்த உண்மை

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன.

அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது.

அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ மறைத்து வைத்துள்ள, எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான்.

நீதி :
உண்மை நிச்சயம் வெல்லும்
 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🔮அல்பேனியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலியாகி உள்ளனர். 600 பேர் காயமடைந்துள்ளனர்.

🔮ஆசிய சாம்பியன்ஷிப் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் வெண்கலம் வென்றார்.

🔮உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்: விழுப்புரத்தில் முதல்வர் உரை.

🔮சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடர்: பஞ்சாப் அணியை போராடி வென்றது தமிழகம்

🔮பொங்கல் பண்டிகை: அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

HEADLINES

🔮New York Consulate issues travel advisory for Overseas Citizen of India cardholders.

🔮26-hour countdown begins for Cartosat-3 launch.

🔮TN CM announces ₹1,000 for all rice cardholders as Pongal gift.

🔮Chennai Corporation launches battery-operated tricycles to collect garbage.

🔮Football: A dramatic win for Chennaiyin FC over Hyderabad.


🔮PV Sindhu, Tai Tzu Ying fetch joint highest Rs 77 lakh in PBL auction