Home Top Ad

WELCOME TO KALVIEXPRESS--- உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :kalviexpress@gmail.com -Whats App - 9486802454

பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Share:

01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இணையதள வழி கலந்தாய்வு மூலம் கலந்து கொண்டு பதவி உயர்வு , பணிமாறுதல் பெற்றவர் பணியில் சேர்ந்த விவரம் கோரப்பட்டமைக்கு 110 நபர்கள் சார்ந்த விவரங்கள் வரப்பெறாததால் , 110 நபர்களின் பட்டியல் இணைத்து அவர்கள் சார்ந்த விவரங்கள் 28.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.

மேற்கண்ட 110 நபர்கள் பட்டியல் இணைத்து விவரங்கள் கோரப்பட்டதைத் தொடர்ந்து 05.03.2020 நாளிட்ட செயல்முறைகளில் நினைவூட்டு அனுப்பிய நிலையிலும் நாளது வரை 50 நபர்கள் விவரம் வரப்பெறாததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

 எனவே , 17.02.2020 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பப்பட்டுள்ள 110 நபர்களின் பட்டியலினை சரிபார்த்து அதில் கீழ்க்கண்ட வரிசை எண்ணில் உள்ள 50 நபர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார நகல்களுடன் 05.06.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Join Telegram& Whats App Group Link -Click Here

No comments


குறிப்பு

1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: KALVIEXPRESS