விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி்ல்லிபுத்தூர் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமுலில் உள்ளதால் வாழ்வாதரத்தை இழந்து தவித்த பள்ளி மாணவ மாணவியரின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் நிவாரண உதவிகள் வழங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 170 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.இங்கு தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் மற்றும் 8 ஆசிரியர்கள் வருகிறார்கள்.
கிராமத்தில் உள்ள மக்கள் அன்றாட கூலி வேலை செய்து வருபவர்கள். தற்போது முழு ஊடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதரம் இழந்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தனர்.
இது குறித்து அறிந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 170 மாணவ மாணவியரின் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தங்களது சொந்த செலவில் வழங்கினர்.
நிவாரண உதவிகளை மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் தலைமையில்,  ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ் முன்னிலையில்  தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியைகள் கோ.மகாலட்சுமி, கா.ராஜேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் ஜி.எட்வின் பாஸ்கர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் மற்றும் கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் விலகி இருக்க வேண்டும் என்றும், அவசியம் கருதி வெளியே வரும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், வீட்டில் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


Join Telegram& Whats App Group Link -Click Here