மருத்துவ படிப்பிற்கானகலந்தாய்வு,நீட் தேர்வுமதிப்பெண்கள் அடிப்படையில் நாளை மறுநாள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில்நீட் தேர்வுஅடிப்படையில் உடனடியாக மருத்துவகலந்தாய்வுநடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.இந்நிலையில்நீட் தேர்வுமதிப்பெண்கள் அடிப்படையில் நாளை பிற்பகல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனதெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் முதல் மருத்துவ படிப்பிற்கானகலந்தாய்வுதொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..