பெயர்: தட்டான்... வயது: 325 மில்லியன் ஆண்டுகள்... இப்போதைய நிலைமை: கவலைக்கிடம்!
"கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்… கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்…" எனச் சொல்லிக்கொண்டே ஒரு கையில் சின்னக் கல்லையும், மறுகையில் தட்டானையும் பிடித்துக்கொண்டு, தட்டானை கல்லைத் தூக்கச்சொல்லியதும், தட்டானைப் பிடித்து அதன் வாலில் நூலைக் கட்டி பறக்கவிட்டதெல்லாம் ஒரு காலம். தட்டான் தாழப்பறந்தால் மழை வரும் என்பார்கள். இன்று மழையையும் காண முடியவில்லை. தட்டானையும் கண்டுபிடிக்க முடியவில்லை.!
கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணி:
மழைக்காலத்தில் கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்துவந்தது தட்டான்கள்தான். தட்டான்களுக்கு நீர்நிலைகள்தான் உலகம். இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தட்டான்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை நீர்நிலைகளில் இட்டுவிட்டுச்செல்லும். நம் வெப்பமண்டல சூழலுக்கு அம்முட்டைகள் 10 நாள்களில் பொறித்துவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்உயிரியானது சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை நீரிலேயே வாழும். அந்தக் காலகட்டத்தில் அதன் முக்கிய உணவு கொசுக்களின் லார்வாக்கள்தான். தன்னால் முடிந்தவரை கொசுக்களின் லார்வாக்களை உண்டு முதிர்ச்சியடைந்ததும் நீரை விட்டு வெளியேறிவிடும். தனது உடலைச் சுற்றியிருக்கும் உறை போன்ற பகுதியை உடைத்துக்கொண்டு இறக்கைகள் உடைய, முழுமையாக வளர்ச்சியடைந்த தட்டானாக வெளியே வரும். நீரில் இருக்கும் போதும் , வெளியே பறக்க ஆரம்பத்த பிறகும் கொசுக்கள்தான் அதன் பிரதான உணவு. இரண்டு மீட்டர் வரை துல்லியமாகப் பார்க்கும் திறன் உடைய இரண்டு கூட்டுக்கண்கள் தட்டானுக்கு உண்டு. அவை, கொசுக்களை வேட்டையாடும் முறை வித்தியாசமானது. பறக்கும்போது தனது ஆறு கால்களையும் ஒன்று சேர்த்து கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அந்தக் கூடைக்குள் விழும் கொசுக்கள்தான் அந்நேரத்து உணவு. பறந்துகொண்டே சாப்பிடும் அல்லது செடியில் அமர்ந்துகொண்டு சாப்பிடும். பின்னர் கூடைக் கால்களோடு மீண்டும் வேட்டைக்குப் புறப்பட்டுவிடும். இப்படிக் கொசுக்களின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது தட்டான்கள்தான்.
இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தட்டான்களின் உதவியால் விரட்டியிருக்கலாம். நீர்நிலைகளில் மணல் அள்ளுவதில் தொடங்கி, சாக்கடைக் கலப்பு வரை சகலத்தையும் செய்துவிட்ட நாம், இப்போது தட்டான்களைத் தேடுவதில் நியாயம் இல்லை. சிறகு விரித்துப் பறக்கும் அதன் அழகும், நின்றுகொண்டே பறக்கும் அதன் திறமையும், கருப்பட்டிக்காகக் கல்லைத்தூக்கும் அதன் பாங்கும், இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்க்கமுடியாது என்பதே கசப்பான உண்மை.
இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தட்டான்களின் உதவியால் விரட்டியிருக்கலாம். நீர்நிலைகளில் மணல் அள்ளுவதில் தொடங்கி, சாக்கடைக் கலப்பு வரை சகலத்தையும் செய்துவிட்ட நாம், இப்போது தட்டான்களைத் தேடுவதில் நியாயம் இல்லை. சிறகு விரித்துப் பறக்கும் அதன் அழகும், நின்றுகொண்டே பறக்கும் அதன் திறமையும், கருப்பட்டிக்காகக் கல்லைத்தூக்கும் அதன் பாங்கும், இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்க்கமுடியாது என்பதே கசப்பான உண்மை.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..