சாதாரண கண்களுக்கு தெரியும் என்பதினாலேயே 'சாட்டர்ன்' எனப்படும் சனிக்கோளானது வரலாற்றுக் காலங்களுக்கு முன்னரே அறியப்பட்டிருக்கிறது. இருப்பினும், தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் சனி கிரகத்தின் அற்புதமான மோதிரங்களை நம்மால் கவனிக்க முடிந்துள்ளது. அப்படியாக, 1610-இல் கலிலியோ கலிலீயின் தொலைநோக்கி கண்களுக்குள் தான் முதன் முதலில் சனிக்கோள் சிக்கியது என்கிறது "எழுதப்பட்ட" வரலாறு.!


சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு சனிக்கோள் கொண்டிருப்பதை போன்ற எந்தவொரு வளையங்களும் இல்லை. அவ்வளவு ஏன்.? விண்வெளியில் கிரக மோதிரங்கள் அமைப்பு என்பது மிகவும் பொதுவானவை என்றாலும் கூட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சனிக்கோளை போன்ற வளையங்கள் கொண்ட சில நட்சத்திரங்களை (பிடிஎஸ் 110, சரிக்ளோ ) மட்டுமே இதுவரை கண்டறிந்துள்ளனர்.


மர்மம் சார்ந்த ஒரு உணர்வு
அதுவொரு பக்கமிருக்க, கலிலியோவின் தொலைநோக்கி பார்வையில் சிக்கியத்திலிருந்தே சனி கிரகத்தின் வளையங்கள், மர்மம் சார்ந்த ஒரு உணர்வைத் தூண்டிக்கொண்டிருக்கின்றன. நான்கு நூற்றாண்டுகளாகியும் கூட, வானியல் வல்லுநர்கள் சாட்டர்ன் வளையங்களை பற்றி சிந்திகாத நாளில்லை.

மிகச்சிறந்த முயற்சியொன்றின் முடிவு
இருந்துமே, இந்த சனி கோளின் "மோதிரங்கள்" விளைந்ததற்கான காரணம் மற்றும் சரியான தெளிவு என்று எதையுமே அவர்கள் விளக்கவில்லை. அந்த வளையங்கள் சார்ந்த விளக்கத்தைப்பெற இதுவரை செய்யப்பட்ட மிகச்சிறந்த முயற்சியொன்றின் முடிவு - அதாவது சனிக்கோளின் மோதிரங்கள் உருவாக்கப்படுவதற்கான ஒரு புதிய தத்துவத்தை - ஜர்னல் நேச்சர் பத்திரிகையில் போல்டரின் தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் ராபின் கேனப் வெளியிட்டுள்ளார்.

ஒரு சந்திர கிரகணத்தின் பனிக்கட்டி கழிவுகள்
அவர் வெளியிட்டுள்ள கோட்பாடானது மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல், அற்புதமானதாகவும் உள்ளது. கேனப் கோட்பாட்டின் படி, இந்த சனிக்கோளின் மோதிரங்கள் ஒரு சந்திர கிரகணத்தின் பனிக்கட்டி கழிவுகள் என்று கூறுகிறது

நெருக்கமான மற்றும் நிலையான
சனி மற்றும் அதனோடு சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான போது, ​​சனி கிரகத்தின் பெரிய நிலவொன்று சனிக்கோளுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நிலையான ஒரு சுற்றுவட்டப் பாதையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


10,000 ஆண்டுகளுக்குப் பிறகு
அந்த சந்திர கிரகம் சனிக்கோளின் மீதான உள்நோக்கிய சுழற்சியைத் தொடங்கவும் சனியின் ஈர்ப்பு அதன்பனிக்கட்டி வெளிப்புற அடுக்குகளை அகற்றி, தனது சுற்றுப்பாதையிலிருந்து விலக்கி, நாம் இன்று பார்க்கும் மோதிரங்களாய் உருவாக்கியுள்ளது. பின்னர், சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு, சந்திரனின் எஞ்சியிருந்த பாறை கோளம் இறுதியாக சனிக்கோளுடன் மோதியதுடன், நொறுங்கியும் உள்ளது.

கிரகத்தின் ஈர்ப்பு மூலம் சிதைகப்பட்ட
சனிக்கோள் சார்ந்த ஆய்வுகளை நடத்தும் நாசாவின் காசினி மிஷினில் பணிபுரியும் ஒரு முக்கிய கிரக வானியலாளரான, லாரி எஸ்போசிட்டோவின் கருத்துப்படி, சனியின் வளையங்கள் கிரகத்தின் ஈர்ப்பு மூலம் சிதைகப்பட்ட ஒரு சிறிய நிலவாக அல்லது கண்டத்து சென்ற ஒரு வால்மீனாக தோற்றமளிக்கின்றன"

ஷேவ்டு ஐஸ் கோட்பாடு
"இருப்பினும், அந்த மோதிரங்கள் மிகவும் பனிக்கட்டியாய் இருப்பது அந்த விளக்கங்களை தோல்வியுற செய்தது, ஏனெனில் நிலாக்கள் மற்றும் வால்மீன்கள் ஆகியவை பாறைகளாய் இருக்கும். இதை கேனப் கூறும் "ஷேவ்டு ஐஸ்" கோட்பாடு விளக்குகிறது. அதாவது மோதிரத்தின் கலவையை பற்றி விவரிப்பதற்கு அவர் மிகவும் புத்திசாலித்தனமான வழியைக் கொண்டு வந்திருக்கிறார்" என்று எஸ்போசிட்டோ கூறியுள்ளார்.

பனியால் உருவாக்கம் பெற்றதல்ல, பாறைதான்
இந்த புதிய கோட்பாடு, சனிக்கோளின் சுற்றுவட்டாரங்களை பற்றிய முழுமையான தீர்க்கமான தகவல் அல்ல. அதாவது இந்த கோட்பானது "சனிக்கோளின் வளையங்களில் உள்ள அனைத்துமே பனியால் உருவாக்கப்பட்டுள்ளது சிறிய நிலாக்கள் உட்பட" என்கிறது. "ஆனால் அவைகள் பனியால் உருவாக்கம் பெற்றதல்ல, பாறைதான்" என்று தனது முடிவை எஸ்போசிட்டோ தெரிவித்துள்ளார்.

அடிப்படை யோசனை
கார்னில் பல்கலைக் கழகத்தின் மற்றொரு மோதிர வானியலாளர் மத்தேயு டிஸ்கெரனோவின் கருத்துப்படி ​​"இந்த புதிய கோட்பாடு இறுதி வார்த்தை அல்ல என்றாலும் கூட, கேனப் கோட்பாட்டின் அடிப்படை யோசனையானது, சிந்தனை மிகுந்த உற்பத்தி முறையாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்" என்று ஆதரவளித்துளார். ஆனால் அந்த பாறை நிலாக்கள் அசாதாரண நிலையில் இருப்பதால், சனிக்கோளின் வளையங்களின் மர்மம் இன்னும் தொடர்கிறது.