பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான காலக்கெடு ஆகஸட் 31 அதாவது இன்று தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017- 18-ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்.
ஆதார் - பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. www.incometax, indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் - பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..