சென்னை: ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா ? என கமல் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டில் கருத்து பதிவிட்டுள்ளார். கமல் அரசியலுக்கு வருவதற்கு அச்சாரம் போட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் அரசியல் தொடர்பான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில்: அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்று சொல்லப்படும் போது , குதிரை பேரத்தில் ஈடுபடும் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஊதியம் வழங்கலாம் ? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது பணியை புறக்கணிக்கும் எம்எல்ஏக்கள் மீதும் கோர்ட் இது போன்ற எச்சரிக்கையை விட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.