பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை(செப்., 7) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில்,மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அதிகளவுசம்பளம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.