ஏற்கனவே பல்வேறு விசியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கூறப்பட்ட நிலையில், தற்போது மொபைல் எங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என மத்தியஅரசு அறிவித்தது.
வரும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதத்திற்குள் இணைக்கவிட்டால் மொபைல்எண் செயல் இழக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்களது மொபைல் எண்ணினை பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர் எனவும். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மாக்களின் மனதில் நிலவும் குழப்பம்; எவ்வாறு ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது? என்பதுதான்.
எப்படி இணைப்பது?
1. அருகாமையில் உள்ள தங்களது எண்ணின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.
2. அங்குள்ள வடிக்கையாளர் சேவை அதிகாரி மூலன் தங்களுடைய கைபேசிக்கு 4 இலக்க எண் ஒன்று அனுப்பபடும்
3. இந்த எண்ணினை சேவை மையத்தில் கொடுக்க வேண்டும். பின்னர் தங்களது கைரேகை மற்றும் ஆதார் எண்ணினையும் அளிக்க வேண்டும்.
4. 24 மணிநேரத்தில் தங்களது கைபேசிக்கு "தங்களது ஆதார் எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது" என செய்தி ஒன்று அனுப்பப்படும்.
இந்த சேவையானது இதுவரை ஆன்லைன் முறையில் கொண்டு வரப்படவில்லை. விரைவில் இந்த சேவையினை தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆன்லைன் சேவையாக கொண்டுவர வேணும் என்பது மக்களின் வேண்டுகோளாய் உள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..