புதுச்சேரி நகரில் அரசுப் பள்ளிகளின் உணவு இடைவேளை நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகரில் உள்ள அரசுப் பள்ளிகள் தினசரி காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.25 வரையும், தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4.15 வரையும் இயங்குகின்றன.
இந்த நிலையில், உணவு இடைவேளை நேரத்தை 35 நிமிடம் குறைத்து, பள்ளிக் கல்வித் துறை நேரத்தை மாற்றியமைக்க உள்ளது. இதன்படி, பள்ளிகள் காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.25 வரையும், பின்னர் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 30 நிமிஷம் முன்னதாக 3.45 மணிக்கும் பள்ளி முடிவடையும்.
இந்த நேர மாற்றம் அக்டோபர் 3-ஆம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. இதுதொடர்பாக நகரில் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
உணவு இடைவேளை நேரத்தில் வெளியில் செல்லும் மாணவர்கள், நெடுந்தொலைவு சென்று விளையாடி வருவது, இணையதள மையங்களுக்குச் செல்வது, படிப்பின் மீதான கவனம் திசை மாறும் வகையில் நேரத்தை வீணடிப்பது ஆகியவற்றைத் தவிர்க்கும் நோக்கில், கல்வி அமைச்சரின் ஒப்புதலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நேர மாற்றம் நகர்ப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..