ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே செப். 7 ஆம் தேதி (வியாழக்கிழமை)
முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வர் பழனிசாமி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அக்டோபர் 15- ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகி இளங்கோவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..