சிறந்த வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்களால் நடத்தப்படும், 'ஸ்வயம்' என்ற, ஆன் - லைன் படிப்பு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, கல்லுாரிகள், பல்கலைகளில், 'ஆன் - லைன்' படிப்பை கட்டாயமாக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு அனுமதி பெறுவதற்கு, செப்., க்குள் விண்ணப்பிக்க, பல்கலைக் கழக மானியக் குழுவான,யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது.

தற்போது, அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும்மாணவர்களை சேர்க்கும் வகையில், அனுமதி பெறுவதற்கான அவகாசத்தை, அக்., வரைநீடித்து, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.