பூமிக்கு
மாற்றாக மனிதர்கள் வாழத் தேவையான சூழல்
கொண்ட இதர கோள்கள் கண்டுபிடிக்கும் வரை
காத்திராமல், விண்வெளியில் புதிய நாட்டையே உருவாக்கி
வருகிறது ஒரு விஞ்ஞானிகள் அமைப்பு.
இதன் தலைமை ஆட்சிப் பொறுப்பாளர்,
டாக்டர் இகோர் அசுர்பெய்லி. "ஏரோ ஸ்பேஸ்
இன்டர்நேஷனல்' ஆய்வுக் கழகத்தின் தலைவரும்
இவர்தான்.
இந்த நாட்டின் பெயர் "அஸ்கார்டியா. அஸ்கார்டியா என்றால் "வானில் இருக்கும் நகரம்'
அல்லது "கடவுள்களின் நாடு' என்று அர்த்தமாம்.
விண்வெளியில் அமைதி என்பதே அஸ்கார்டியாவின்
நோக்கம். "அஸ்கார்டியா - ஒரு நாடு' என்பதற்கான
அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை
வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பூமியில் பல நாடுகளில் அஸ்கார்டியாவின்
தூதரகங்கள் அமையுமாம்.
இந்த புதிய நாட்டில் குடியேற
இரண்டு லட்சம் பேர் மட்டுமே
தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியேற்றம் தொடங்கும்.
-பிஸ்மி
பரிணாமன்

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..