ஸ்டாக்ஹோம்: 2017ம் ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவின் ரிச்சர்டு ஹெச். தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் கோரன் ஹான்சன், இதனை அறிவித்தார்.
உளவியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே இருந்த இடைவெளியை ஒருங்கிணைத்ததற்காக, 2017ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஹெச் தாலருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"சமூக பங்களிப்பு, சுயக் கட்டுப்பாட்டில் தளர்வு, குறைந்த பகுத்தறிவு போன்ற மனிதர்களின் தனிக்கூறுகள் மற்றும் தனிமனிதர்களின் முடிவுகள் எவ்வாறு பொருளாதார சந்தையை பாதிக்கின்றன என்பது குறித்து வெளிப்படுத்தியதற்காக" என்று நோபல் பரிசு குறித்த அறிவிப்பின் போது வாசிக்கப்பட்டது.
ரிச்சர்ட் ஹெச். தாலர், தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
முன்னதாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றிருந்ததால், பொளாதாரத்துக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு இந்தியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..