போர்சுகல் நாட்டின் கடலோர பகுதியில், 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை சுறா மீன் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போர்சுகல் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள கடற்பகுதியில்,ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த போது, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை சுறா மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அரிய வகை சுறா மீன் மெலிதான, பாம்பு போன்ற உடலை கொண்டதாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மீனின் வாயில் 25 வரிசைகளில், சுமார் 300 பற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த மீனுக்கு “Chlamydosel achusAnguineus”என்று பெயரிட்டுள்ளனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பானில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட
சுறாக்களின் பட்டியலில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆரிய வகை சுறா மீனை, போர்ச்சுக்கீய கடல் ஆராய்ச்சி பல்கலைகழகம் சேர்த்துள்ளது. இந்த உயிரினம் கடலுக்கடியே சுமார் 39௦ மற்றும் 4,200 அடி வரை இடையேயான ஆழமான பகுதியில் வாழ்வதால், 19ம் நூற்றாண்டிற்கு முன்பு இந்த உயிரினத்தை கண்டுபிடிக்க முடியாததற்கு ஒரு முக்கிய காரணமாகும்
போர்சுக்கல்லில் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை மீன் கண்டுபிடிப்பு
Tags
SCIENCE
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..