திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் மிதமாக தொடங்கிய மழை, நேற்றிரவு முழுவதும் கனமழையாக பெய்தது. அத்துடன் நாகை மாவட்டத்திலும் பரவலான மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னையை பொறுத்த வரையில் நேற்று பகல் நேரத்தில் பல இடங்களில் பெய்த கனமழை, இரவிலும் பெய்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.