ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் தவறு செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பரிந்துரைத்துள்ளோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இதுபோன்ற தவறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அறிந்த பின்னர் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃஐஆர்) பதிவு செய்ய கடிதம் கொடுத்துள்ளோம். இதைத் தொடர்ந்து கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். இதற்குப் பிறகு எங்கே தவறு நடைபெற்றது என்பது தெரியவரும். இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.