மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் எண் உள்ளிட்டவைகளும் ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு கூறி வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆதாரில் உள்ள கைரேகையுடன், பலரின் கைரேகை ஒத்துப் போவதில்லை என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கே இந்த பிரச்னை இருந்து வருகிறது.

இந்த பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய வசதியை துவக்க உள்ளதாக உதய் (UDAI) இன்று தெரிவித்துள்ளது.