தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது.
இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.சுமார் 20.8 லட்சம் பேர் எழுதவுள்ள இந்த தேர்வுக்கானஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் மேலும் விண்ணப்ப கட்டணம் கிடைக்க பெறாதவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய லானுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் இமெயில் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இவ்வாறு தமிழக அரசின் தேர்வுத்துறை தனது அறிக்கையில்தெரிவித்துள்ளது.