தருமபுரி: உயர்கல்வியில் 7 ஆண்டுகளில் 1,037 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது இதனை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.