வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் உதவிக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் உதவிக்கான ஹெல்ப்லைன் எண் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, 18001030025 என்ற கட்டணமில்லா எண்ணிலும், +918046122000 என்ற எண்ணில் நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
அதுபோலவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் ஆன்லைனில் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய, https://www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். இணையதளத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.