சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குஇலவச பஸ் தொடர்ந்துவழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து அரசு வெளி்யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:பஸ் கட்டணம் அதிகரித்த போதும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பஸ் பாஸ் வழங்கப்படும் . இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு பஸ்கள் மாற்றம் 498 விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டண பஸ்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2018-18 -ம் ஆண்டில் பள்ளிமாணவ,மாணவிகளுக்கு பயண அட்டைகள் வழங்குவதற்காக போக்குவரத்துகழகத்திற்கு 540 .99கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது