நியூயார்க்: பருவநிலை மாற்றங்கள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மாற்றங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப் போர் உள்ளிட்ட அழிவுகளை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.உலக அழிவை குறிக்கும் வகையில் 'டூம்ஸ் டே' கடிகாரத்தில் ஊழிகாலத்தை 2 நிமிடங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர். மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்ற அழைக்கப்படும் டூம்ஸ்டே கிளாக் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச் சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947ம் ஆண்டில் டூம்ஸ் டே கிளாக் அமைக்கப்பட்ட போது ஊழி காலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அது 2 நிமிடங்கள் மட்டுமே ஊழி காலத்திற்கு இருப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Doomsday Clock -click here
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..