தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 32 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது..தமிழகத்தில் 2005-ம் வருடம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பணியில் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் வணிக வரித்துறை இணை கமிஷனர்கள் பாலாஜி, மகேஸ்வரி ஆகியோரின் பதவி, கூடுதல் ஆணையராக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் துறை இணை செயலாளர் கருணாகரன், பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர் லில்லி ஆகியோர், கூடுதல் செயலராக பணியாற்ற உள்ளனர். மற்ற அதிகாரிகளின் பதவியில் மாற்றம் இல்லை.
தமிழகத்தைச் சேர்ந்த 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாக பதவி ஏற்க உள்ளனர். தற்போது, எஸ்.பி., மற்றும் துணை கமிஷனராக பணியாற்றி வரும் நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளான செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ரா கர்க், பாபு, செந்தில்குமாரி, துரை குமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகவுரி, காமினி ஆகியோருக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.