புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 7-ஆம் தேதி முதல் இணையம் (ஆன்-லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மே 21 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஜிப்மர் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெறுவதாக அதன் டீன் சாமிநாதன் கூறியுள்ளார். இந்த நுழைவுத் தேர்வினை எழுத பிப்ரவரி 3 முதல், ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..