சென்னை: நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனரின் அதிரடி உத்தரவால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.