தமிழகம் முழுவதும் 54ஆயிரம் பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள், தனியார் பள்ளியில் கூட  வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை பல முறை வைத்தும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை வருகின்ற பட்ஜெட்டிவாது இதற்கான விடியல் வருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கணினி பாடத்திட்டம் :

தமிழகத்தில் கணினி பாடத்திட்டம் மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது . கணினி பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன இது உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் மாணவர்கள் தங்கள் சுய சிந்தனையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் இப்பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது . கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் இணைத்து  வழங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் கூட பொய்த்து போனது! புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் இணைப்பு பாடமாக தந்ததால் ஏமாற்றம்.!!!

        2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 1, 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின்  இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது     மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி   வெறும் பாடத்தை மட்டும்  இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது தமிழக அரசு.

"தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கல்வியமைச்சருக்கு இதுவரை 54 முறை நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளோம்":

கோரிக்கைகள்:

•அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).

• புதிய பாடத்திட்டத்தில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, அறிவியல் பாடத்துடன் இணைக்காமல் தனிப்பாடமாக  அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிடப்பட்ட (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வரை செய்முறை பயிற்சியுடன்.)

• கடந்த 12ஆண்டுகளாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவிக்க வேண்டும். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.

குறிப்பு:

சென்ற 2017-2018 பட்ஜெட் அறிவிப்பு:748 பணியிடங்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நியமிப்பதாக இருந்தது அதுவும் கூட நிலுவையில் உள்ளது நிரைவேறாமல்.

• கணினி அறிவியலை பயிற்றுவிக்க ஒப்பந்த ஊழியர்களை  தேர்வு செய்யாமல் தகுதிவாய்ந்த பி.எட். பட்டதாரிகளை பணிநியமனம் செய்திட வேண்டும்.

•கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்.

• அரசு பள்ளிகள் அனைத்திலும் (1ம் வகுப்பு முதல் - 12ம் வகுப்பு வரை) குறைந்த பட்சம் 20முதல் 40வரை கணினிகளைக் கொண்ட அதிநவீன கணினி ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும்.

•எங்கும் கணினி எதிலும் கணினி என்று இருக்கும் காலகட்டத்தில் மாணவர்கள் கணினி கல்வியை நாளுக்கு நாள் அதிகமாக விரும்பி படிக்கின்றனர் ஆகையால் இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணினி அறிவியல் பாடத்தை உடனடியாக நடைமுரைபடுதவேண்டும் தமிழக அரசு.

•பி.எட் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 54,000பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீனயுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் அறிவியல் கல்வியை கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.எனவே கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை அவர்களின் வாழ்வதாரக் கோரிக்கையாக நினைத்து  மாண்புமிகு தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.