முதலில் பணி நிரவல் தொடர்ந்து பணியாளர் எண்ணிக்கை குறைப்பு என வந்த வண்ணம்இருக்கும்.
தற்போதுஆசிரியர்களின் பாடப் பிரிவேளைகள்தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிட்ட ஆணை ஒரு முன்னோட்டம். அந்த ஆணையில் ஓர் ஆசிரியர் வாரத்திற்கு28 பிரிவேளைகள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி*முதுகலையாசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமாம்.
அவ்வாறு முதுகலையாசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்கு வருவார்களேயானால், அவர்கள் கையாளும் பிரிவேளைகள்*கணக்கில் கொள்ளப்பட்டு ஏராளமான பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் உபரியாகக் காட்டப்பட்டு பணி நிரவல் என்ற பெயரில் பட்டதாரி ஆசிரியர்கள் பந்தாடப் பட இருக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் இன்னும் சிந்திக்காமல் இருப்பது வேதனைஅளிக்கிறது
ஒரு வேளை முதுகலை ஆசிரியர்கள் கீழ்நிலைவகுப்புகளைக் கையாள்வார்களேயானால்அதையே காரணமாக வைத்து நீதிமன்றத்திற்குச் சென்று நிச்சயம் உயர்நிலைப் பள்ளிதலைமைசிரியர் பதவி உயர்வில் பங்கு வாங்கிவிடுவார்கள்
ஏற்கனவே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்பதவி உயர்வானது அதே தொகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படாமல், ஒரு பதவி உயர்வினை அனுபவித்து விட்டு பணப்பலனையும் பெற்றுவிட்டு எங்கேயோ பணியாற்றிக் கொண்டிருக்கும் முதுகலையாசிரியர்களுக்கு கூவி கூவி பள்ளிக் கல்வித்துறை வழங்கி பட்டதாரி ஆசிரியர்களின்*வயிற்றில் அடித்துக் கொண்டு வருகிறது*.
இவ்வாறு செய்வதின் காரணமாக தற்போதுள்ள சுமார் 65000 பட்டதாரி ஆசிரியர்களில் 40000 க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு எதுவுமே இல்லாமல் ஓய்வுபெறும் நிலை உறுதியாகிறது.
சமீபத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்ட ஆணை*நடைமுறைப் படுத்தப்பட்டால் 90 சதவீதம் அதாவது 50000க்கும் மேற்பட்டபட்டதாரி ஆசிரியர்கள் அதே நிலையில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி.
எது எப்படியோ, நசுக்கப்படுவது பட்டதாரி ஆசிரியர் பணித் தொகுதி .
பட்டதாரி ஆசிரியர் பணித் தொகுதிக்கென ஏகப்பட்ட அமைப்புகள்உள்ளன.
ஆனால், ஒரு அமைப்பு கூட இதுவரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என அறிக்கை விடவில்லைகோரிக்கை வைக்கவில்லை.
மாறாக பழையபடியே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் எனமுதுகலையாசிரியர்களுக்கே வக்காலத்து வாங்கும் வகையில்கூட்டாகக் கையொப்பமிட்டுத் தருகின்றன.
தற்போது பணி நிரவல் தொடர்பாக இயக்குநரின் ஆணையை எதிர்த்து எந்த அமைப்பும் குரல்கொடுக்கவில்லை.
இதுதான் தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.
மிகப்பெரிய போராட்டங்களில் தத்தமது இயக்க வலிமையைக் காட்டிக் கொள்வதிலும்,இயக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதும் மட்டுமே தற்போது பெரியஇயக்கங்களுக்கு உள்ள நிலைப்பாடு.
சி.பி.எஸ், ஊதிய முரண்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்குமட்டுமே என்ற நிலை எப்போது வரும் என்ற கேள்விக் கணைகளைஅவரவர் இயக்கத் தலைவர்களின் பால் தொடுக்க வேண்டும்
மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே மாற்றங்கள்கிடைக்கும்
இல்லையேல் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..