பள்ளிக்கல்வித்துறையின் முன் அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சுற்றுலாவின் கால அளவு எக்காரணம் கொண்டும் 4 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி, கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்று தெரிவித்தார். மேலும்  சுற்றுலா லாப நோக்குடன் இருக்கக் கூடாது; கல்வி சார்ந்தே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறும் மாணவர்களை மருத்துவரின் அனுமதியின்றி அழைத்துச் செல்லக்கூடாது  என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலா செல்லும் போது பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மற்றும் பத்து மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ள