கிருஷ்ணகிரி: 8 மாவட்டங்களுக்கு இன்று நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. காலயிடங்கள் அதிகமுள்ள 8 மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பூர், விழுப்புரம், ஈரோடு, சேலத்தில் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.