புதுச்சேரி : பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் இன்று (24ம் தேதி) வெளியாகிறது. விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் இரண்டு நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஜூன், ஜூலை மாதம் பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (24ம் தேதி) பிற்பகல் வெளியாகிறது. www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில், லாகின் செய்தவுடன், புரவிஷனல் மார்க் ஷீட், எச்.எஸ்இ., இரண்டாம் ஆண்டு ரிசல்ட் ஜூன்-2018 என்ற தோன்றும் வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில், தேர்வர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழை டவுண்லோடு செய்த பிறகு, விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், புதுச்சேரி அண்ணா நகர் பள்ளி கல்வி இயக்ககத்தின் நான்காம் தளத்தில் அமைந்துள்ள மேல்நிலை கல்வி தேர்வு அலுவலகத்தில், 25மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் நேரில் வந்து, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.விடைத்தாள் நகல் கட்டணம்பகுதி-1 மொழி இரு தாள்களுக்கு 550 ரூபாய், பகுதி-2 ஆங்கிலம் இரு தாள்கள்-550 ரூபாய் கட்டணம். ஏனைய பாடங்களுக்கு ஒன்வொன்றிக்கும்,275 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.மறு கூட்டல் கட்டணம் பகுதி-1 மொழி, பகுதி-2 ஆங்கிலம் மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிக்கும் (இரு தாள்கள்)-305 ரூபாய், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்,205 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே விடைத்தாள் நகலினையும் மறு கூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ள முடியும். விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள், இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..